Friday, May 8, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் நிலையத்திற்குள் மோதல்: 19 பேர் கைது

பொலிஸ் நிலையத்திற்குள் மோதல்: 19 பேர் கைது

ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைக்கு அழைக்கப்பட்ட இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டதன் காரணமாக 5 பெண்கள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிகம கடற்கரையில் படகொன்று சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட முறைப்பாட்டாளர்கள் குழுவும், பிரதிவாதிகள் குழுவும் பொலிஸ் நிலையத்தினுள் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ரத்கம மற்றும் தொடந்துவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஒருவரிடம் இருந்த கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles