காலி-கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இராணுவப் பேருந்து மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (05) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் , அவரின் அடையாளம் இது வரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவ பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
