Friday, May 8, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து விலை குறைப்புக்கு அனுமதி

மருந்து விலை குறைப்புக்கு அனுமதி

60 வகை மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை 16 சதவீதத்தால் குறைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் பதிவுசெய்யப்பட்ட மருந்துகளின் விலை எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் 16 சதவீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடலைத் தொடர்ந்து, விலைக் கட்டுப்பாட்டின் மூலம் கட்டுப்படுத்தப்படும் NMRA மருந்துகளின் விலைகளைக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles