தம்புள்ளை – குருநாகல் வீதியில் தம்பாவத்தை சந்தி வீதியில் பயணித்த ஒருவர் நேற்று (05) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று குறித்த நபர் மீது மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
72 வயதுடைய தம்பவத்த – தோராய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
