Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: விசேட குழு நியமனம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் வழக்கு: விசேட குழு நியமனம்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடு பெற சிங்கப்பூரில் ஒதுக்கப்பட்ட இழப்பீட்டு வழக்கை தீர்ப்பது குறித்து ஆலோசிக்க விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலுடன் இக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று (05) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் குழுவுக்கு அங்கீகாரம் கிடைத்ததாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் குழு சிங்கப்பூர் செல்லவுள்ளதாகவும், அங்கு கப்பல் நிறுவனம் மற்றும் கப்பலின் காப்புறுதி நிறுவனத்துடனும் தீர்வு தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சட்டமா அதிபரின் தலைமையில் இந்தக் குழு செயற்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles