தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை – விஜய மாவத்தையை சேர்ந்த ஹொரணையைச் சேர்ந்த சதுர குமார பெர்னாண்டோ என்ற 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் உட்பட 18 பேர் கடந்த 03ஆம் திகதி பொசொன் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக அநுராதபுரம் சென்றுள்ளதுடன், நேற்று (05) மாலை அனுராதபுரத்தில் இருந்து திரும்பும் போது ஹலவத்தை – தெதுரு ஓயாவில் நீராடச் சென்றுள்ளனர்.
அப்போது, இந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் நீரில் மூழ்கிய இளைஞனை சம்பவ இடத்தில் இருந்த குழுவினர் தூக்கிச் சென்று சிகிச்சைக்காக ஹலவத்தை பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும், இளைஞன் ஏற்கனவே இறந்துவிட்டதால், சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது.
