தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலை எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஜூன் 15ஆம் திகதி முதல் மருந்துகளின் விலை 16% ஆல் குறைக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
