Monday, November 10, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டு50 இலட்சம் ரூபா பணத்தை திருடிய இருவர் கைது

50 இலட்சம் ரூபா பணத்தை திருடிய இருவர் கைது

50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக நபர் ஒருவர் கொண்டு சென்ற பணமே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரும், புத்தல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேகநபர் பணம் சொந்தமான தனியார் நிறுவனத்தில் சாரதியாக கடமையாற்றி வருவதுடன், அதனை வங்கிக்கு கொண்டு செல்லும்போது திருடியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரிடமும் 27 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணம் காணப்பட்டதுடன் மேலதிகமாக 04 காசோலைகள் மற்றும் சில பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles