Tuesday, November 11, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாதலியை வீட்டு தோட்டத்தில் புதைத்த காதலன் கைது

காதலியை வீட்டு தோட்டத்தில் புதைத்த காதலன் கைது

மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரை புதைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என அவரின் உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காணாமல் போன பெண்ணின் காதலனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த நபர் (39) தனது காதலியான காணாமல் போன பெண்ணை அவரின் தோட்டத்தில் புதைத்துள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

புதைக்கப்பட்ட பெண் மரணித்தமைக்கான காரணம் தொடர்பில் அறிவதற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles