Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சுப் பதவியை இழக்கத் தயார் - சனத் நிஷாந்த

அமைச்சுப் பதவியை இழக்கத் தயார் – சனத் நிஷாந்த

தனது அமைச்சுப் பதவியை இழக்கத் தயார் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு அயராது உழைத்த பல சிரேஷ்டர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் பின் வரிசைகளில் அமர்ந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டாலும், தவறாக நடத்தப்பட்டாலும் தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

மக்களுக்கு சேவை செய்வதற்கு அமைச்சுப் பதவி தேவையில்லை.

ஒரு கட்சியாகவும், குழுவாகவும் முன்னேற எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles