தேசிய பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 22 Youtube சேனல்களை முடக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய இந்திய அரசுக்கும், வெளிநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக குறித்த சேனல்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த சேனல்கள் போலியான தொலைக்காட்சி இலட்சிணைகளை பயன்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தவறான தகவல்களைப் பகிர்ந்த பிரபலமான 3 ட்விட்டர் கணக்குகளையும், ஒரு பேஸ்புக் கணக்கையும், செய்தி இணையத்தளம் ஆகியவற்றையும் இந்திய அரசாங்கம் முடக்கியுள்ளது.