இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள்.
- *போராட்டங்களை கட்டுப்படுத்துவத்கான சட்டரீதியான செயற்பாடுகள் அனைத்தும் சர்வதேச தரங்களுக்கு உட்பட்டதாகவும், தேவைக்கு உட்பட்டதாகவும் மட்டும் இருக்க வேண்டும்.
- *அமைதியான போராட்டங்கள் மூலம் மக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வருகின்றமை அவதானத்துக்கு உள்ளாகியுள்ளது.
- *அவசரகால சட்ட அமுலாக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள், மக்கள் போராட்டத்தை தடுப்பதற்கு அல்லது மக்கள் போராட்டம் மீதான ஆர்வத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை என நாங்கள் அறிகிறோம்.
- *இராணுவமயமாக்கல் மற்றும் நிறுவக ரீதியான அணுகல்களின் சறுக்கல்களால் பொருளாதார நெருக்கடியை சீர்செய்யும் அரசாங்கத்தின் இயலுமை பாதிக்கப்பட்டுள்ளது.
- *அர்த்தபுஷ்டியான பேச்சுவார்த்தைகளை நடத்தி அரசாங்கம், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் நெருக்கடிக்கு தீர்வினை காண வலியுறுத்தப்படுகின்றன.