11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 62 வயதான பிக்கு ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மொரட்டுவ – எகொடௌயன பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் தாயுடன் குறித்த பிக்கு தொடர்பு வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிசையில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியின் தாயார் (36) சிறுமியையும் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், பெண்ணை போதையாக்கி பிக்கு குறித்த சிறுமி துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களாக சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட போதிலும், இந்த சம்பவத்தை யாரிடமும் கூற வேண்டாம் என சிறுமியை தாய் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை தனது தந்தை மற்றும் பாட்டியிடம் கூறியதை அடுத்து, தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, கல்கிசை கில்டா பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் சம்பந்தப்பட்ட பிக்குவையும் சம்பவத்திற்கு ஆதரவளித்த தாயையும் கைது செய்துள்ளது.
சந்தேகநபர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.