ஜூன் முதலாம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வாடகை அடிப்படையில் பராமரிப்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு கப்பலொன்றை பயன்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, இலங்கை ஷிப்பிங் கம்பனி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டதாக இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த யோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
சர்வதேச போட்டி ஏல முறையின் கீழ் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கான பராமரிப்பு மற்றும் அவசரகால பதிலளிப்பு கப்பலை வாடகை அடிப்படையில் பெற்றுக் செய்வதற்கு 21-11-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.