Thursday, November 13, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சர் கெஹெலியவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

அமைச்சர் கெஹெலியவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மாநாடு மற்றும் ஏனைய உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக கெஹெலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்கி, மே மாதம் 23ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles