செய்திகள்உள்நாட்டுவயல் ஒன்றுக்கு அருகில் இருவர் சடலங்களாக மீட்பு

வயல் ஒன்றுக்கு அருகில் இருவர் சடலங்களாக மீட்பு

வாரியபொல மினுவாங்கெட்டே பகுதியில் வயல் ஒன்றுக்கு அருகில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வயலுக்கு அருகில் உள்ள கண்ணிவெடி குழி ஒன்றில் இந்த இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் 35 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட இருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இருவரும் நேற்று (10) முதல் காணாமல் போயுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles