Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகம்பளை யுவதி கொன்று புதைப்பு?

கம்பளை யுவதி கொன்று புதைப்பு?

கம்பளை, வெலிகல்ல எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று (12) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை விசாரித்ததில், அவர் அப்பகுதியில் ஆடு வளர்த்து வருவது தெரிய வந்தது. ஆடுகளுக்கு புல் வெட்டுவதற்காக சென்ற போது, குறித்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார். அவர் மறுத்ததால், சந்தேக நபர் அவளை காட்டுப் பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளார்.

மேலும், அவர் அங்கேயே கொல்லப்பட்டதாகவும், கொலையின் பின்னர் சடலம் அதே இடத்தில் புதைக்கப்பட்டதாகவும், ஆனால் சடலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த இடத்தை அகழ்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கம்பளை, எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த பகுதிக்கு திடீரென பொலிஸார் விரைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles