Wednesday, November 20, 2024
25.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெலிகொம் பங்குகளின் விற்பனை தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

டெலிகொம் பங்குகளின் விற்பனை தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

அரசாங்கத்திற்குச் சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பில் திறைசேரியின் செயலாளர் உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார்.

ஜூன் 15ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கு திறைசேரி அனுமதியளிக்காது என உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு SLT PLC இன் வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தின் 49.50 சதவீத பங்குகளை திறைசேரி வைத்துள்ளது.

இரண்டு நிறுவனங்களிலும் திறைசேரியிடம் உள்ள பங்குகளை விற்பனை செய்துக் கொள்வதற்கு அமைச்சரவை கொள்கை அடிப்படையில் ஒப்புதல் அளித்துள்ளதாக திறைசேரியின் செயலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபைக்கு தெரிவித்துள்ளார்.

லங்கா ஹொஸ்பிடல் பிஎல்சியின் பங்கு மூலதனத்தின் 51.34 சதவீத பங்குகளும் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளது.

இந்த நடவடிக்கையானது பல பிரிவுகளை ஒன்றிணைத்துள்ளது மற்றும் SLT இன் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம் பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

தற்போது நிலுவையில் உள்ள பங்கு விற்பனை நடவடிக்கைகள் சட்டப்பூர்வமான வழிகளில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திறைசேரியின் செயலாளர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles