Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் விமான சேவையை வாங்க ஆர்வம் காட்டும் டாட்டா நிறுவனம்?

ஸ்ரீலங்கன் விமான சேவையை வாங்க ஆர்வம் காட்டும் டாட்டா நிறுவனம்?

ஸ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்வதில் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான டாட்டா ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சில உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

டாட்டா நிறுவனம் தற்போது ஏர் இந்தியா மற்றும் பல விமான நிறுவனங்களை இந்தியாவில் இயக்கி வருகிறது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அண்மையில் முதலீட்டாளரைத் தேடியது.

ஆனால் அதன் நிதி நிலைமையின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க முன்மொழிவுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

எவ்வாறாயினும்இ ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்ய டாட்டா நிறுவனம் ஆர்வம் காட்டுவதாக வெளியான செய்தி தொடர்பில் நாம் வினவியிருந்தோம்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இவ்வாறான தீர்மானம் தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தலைப் பெறவில்லை என நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles