பிள்ளைகளுக்கு அறநெறி கல்வியை கட்டாயமாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
இந்த ஏற்பாட்டின்படி, அறநெறி பாடசாலைகளுக்கு செல்லாத சிறுவர்களை இனங்கண்டு, அவர்களை அறநெறி பாடசாலைகளுக்கு வழிநடத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
