Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறியுடன் மோதிய எம்.பியின் வாகனம் – 6 பேர் காயம்

லொறியுடன் மோதிய எம்.பியின் வாகனம் – 6 பேர் காயம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் பயணித்த டிஃபென்டர் ரக வாகனம் சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வாரியபொல நகரில் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பான நேற்று இரவு 9.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த டிஃபென்டர் வாகனம் அதிவேகமாக பயணித்ததன் காரணமாக முன்னால் சென்ற சிறிய லொறியுடன் மோதியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த 5 பேரும், நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் வாரியபொல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles