Wednesday, November 20, 2024
27.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹர்த்தாலின் போது பயணித்த பேருந்து மீது கல்வீச்சு

ஹர்த்தாலின் போது பயணித்த பேருந்து மீது கல்வீச்சு

வடக்கு, கிழக்கு தழுவிய பகுதிகளில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி முழுமையான ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட டிப்பொவுக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்று இன்று (25) அதிகாலை 5.30 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது அதன் மீது செல்வபுரம் பகுதியில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்போது பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளதுடன் சாரதியும் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு சாலையில் இருந்து செல்லும் அனைத்து அரச பேருந்துகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles