Tuesday, November 19, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம்

எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம்

எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை விசேட வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் அவசரமாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நோயாளர்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பண்டார தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இவ்வாறான நோயாளர்கள் கராப்பிட்டிய, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக அவசர மற்றும் அவசர சத்திரசிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை வைத்தியசாலைக்கு பரிந்துரைப்பதை தவிர்க்குமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles