Tuesday, November 19, 2024
28.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீள் பயன்பாடற்ற பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற கால அவகாசம்

மீள் பயன்பாடற்ற பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற கால அவகாசம்

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளுக்கு இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது சந்தையில் உள்ள அந்தப் பொருட்களை அகற்றுவதற்கு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.

குளிர்பானம் அருந்த ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்ரோ உள்ளிட்ட பொருட்கள் சிலவற்றிற்கு இறக்குமதி தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த தடை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகவுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பத்துடன் வெளியானது.

இதன்படி, ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பீங்கான்கள், பானக் கோப்பைகள், முள்ளுக்கரண்டிகள், கத்திகள் என்பவற்றை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படவுள்ளது.

அத்துடன் பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, பிளாஸ்டிக் மாலைகள் என்பவற்றை இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles