மரக்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதால் விவசாயிகள் கடும் சிரமத்தில் உள்ளனர்.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தின் தரவுகளின்படி, மரக்கறிகளின் விலை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் நேற்று (06) குறைந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ போஞ்சி விலை 18%,தாலும் ஒரு கிலோ கரட்டின் விலை 10%,தாலும் ஒரு கிலோ வெண்டைக்காய் விலை 3% தாலும் குறைந்துள்ளது.
பச்சை மிளகாய் மட்டும் 1%தாலும் அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ காய்கறிகளின் மொத்த விலை
போஞ்சி ரூ.70-130
கரட் ரூ.70-120
லீக்ஸ் ரூ.160-220
பீட்ரூட் ரூ.70-110
நோகோல் ரூ.70-110
முள்ளங்கி ரூ.10-80
கோவா (நுவரெலியா) ரூ.65-100
தக்காளி ரூ.80-160
வெள்ளரி ரூ.20-60
புடலங்காய் ரூ.70-140
கறி மிளகாய் ரூ.280-320
பூசணி ரூ.30-50