Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உலகம்திரைப்பட இயக்குநராகும் ஒபாமாவின் மகள்

திரைப்பட இயக்குநராகும் ஒபாமாவின் மகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் மூத்த மகள் மலியா ஒபாமா திரைத்துறையில் விரைவில் கால் பதிக்கவுள்ளார்.

டொனால்ட் குரோவர் தயாரிக்கும் குறும்படத்தை மலியா ஒபாமா விரைவில் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலியா ஒபாமா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்படவுள்ள ஒரு குறும்படத்தில், முதல் முறையாக இயக்குநராக தனது பணியை ஆரம்பிக்க உள்ளதாக டொனால்ட் குளோவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் க்ளோவர் மற்றும் மலியா ஒபாமா ஆகியோர் ஏற்கனவே, ஹொரர் த்ரில்லர் தொலைக்காட்சி தொடரான ஸ்வர்மில் பணிபுரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலியா ஒபாமா ஹார்வர்ட் பல்கலைக்கழக பட்டதாரியாவார். அவர் லீனா டன்ஹாமின் பெண்களுக்கான பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.

அதைத் தொடர்ந்து வெய்ன்ஸ்டீன் நிறுவனத்தில் ஹாலே பெர்ரி நடித்த அறிவியல் புனைகதை நாடகத் தொடரான எக்ஸ்டாண்டில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles