Friday, June 19, 2026
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை?

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை?

நாட்டில் எதிர்வரும் நாட்களில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதானி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு காசோலை மூலம் எரிபொருளை விநியோகிக்க இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் மாவட்ட விநியோகஸ்த்தர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஆனால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதி பிரிவின் தலைவர் ரொக்கப் பணத்துக்கு மாத்திரமே எரிபொருளை விநியோகிக்க முடியும் என்று அறிவித்துள்ளதால், பல இடங்களுக்கு எரிபொருள் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இன்று பூரணை விடுமுறை காரணமாக வங்கிகள் தொழிற்படாமையாலும், எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டால், மக்கள் எரிபொருளை அதிகளவில் கொள்வனவு செய்வதாலும் இந்த நிலைமை இன்னும் தீவிரமடைந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles