சவுதி அரேபியாவில் மக்காவுக்கு ஹஜ் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகித் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இந்த விபத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனi’ஃ
ஏமன் நாட்டின் எல்லையை ஒட்டிய தெற்கு மாகாணமான ஆசிரில் திங்கட்கிழமை இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவித்த போதிலும், அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை.
மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வருடாந்திர ஹஜ் யாத்திரைக்காகச் சவுதி அரேபியா நோக்கிச் செல்லும் நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
#Al jazeera