வலுசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிப்பதாக மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று (31) உறுதியளித்தனர்.
பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து நாடுகளின் பிரதிநிதிகளால் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபை உறுப்பினர் மைக்கேல் நெஸ்பி பிரபுவும் நேற்று (31) ஜனாதிபதியை சந்தித்தார்.
இதன்போது பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பியமைக்காக ஜனாதிபதி அவரை பாராட்டினார்.