1. மிரிஹானை – ஜனாதிபதி இல்லத்திற்கு செல்லும் வீதியை மறித்து 5000க்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
2. தண்ணீர் தாக்குதல், கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பன மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.
3. இந்தப் போராட்டம் களனி உள்ளிட்ட சில பகுதிகளுக்கும் பரவியதனால் கொழும்பு மாவட்டத்தின் சில இடங்களுக்கு ஊரடங்கு சட்டம் அமுல் ஆக்கப்பட்டு அதிகாலை 5 மணிக்கு விலக்கப்பட்டது.
4. போராட்டத்தின்போது 45க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.
5. ஐந்து காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து அவர்களில் 3 பேர் சிகிச்சைக்கு பின் வெளியேறியுள்ளனர்.
6. ஒரு ஊடகவியலாளரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
7. ஒரு காவல்துறை பேருந்து, 2 மோட்டார் சைக்கிள், ஒரு தண்ணீர்த்தாரை பிரயோக வண்டி, ஒரு காவல்துறை ஜீப் என 5 வாகனங்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்துள்ளனர்.
8. இந்த போராட்டத்தை அடிப்படைவாத குழு ஒன்றே நடத்தியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.