Saturday, November 1, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் .

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் அழைப்பாளர் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேலை நிறுத்தம் காரணமாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அலுவலக சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் இன்று இடம்பெறாது .

இன்று நண்பகல் 12 மணியளவில் பெலவத்தையிலுள்ள நீர் வழங்கல் அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பு போராட்டமொன்றையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உபாலி ரத்நாயக்க குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles