யாழ்ப்பாண மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிப் பெண்கள் வறுமையில் இருப்பதாக யாழ் மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர்காலத்திற்குப் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிகள் உள்ளனர்.
பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்ப்பிணிப் பெண்களும், சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 118 கர்ப்பிணிகளும் உள்ளனர்.