Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிராக இன்று (13) நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கை, வட்டி விகித அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு, அரசாங்க ஊழியர்களின் பிரச்சினைகள் போன்ற பல பிரச்சினைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தொழில்சார் நடவடிக்கைகளை இந்த வாரத்தில் மேலும் தீவிரப்படுத்துவதற்கு தொழிற்சங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.

கடந்த வாரத்தில் பல துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகள் அமுல்படுத்தப்பட்ட போதும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதில் இணைந்து கொள்ளவில்லை.

எவ்வாறாயினும், இன்று முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் இந்தப் போராட்டங்கள் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.

இதன்படி, மேல், தென், மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளுடன் இணைந்து இன்று காலை 08 ஆம் திகதி முதல் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles