Sunday, September 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து கட்டணம் குறைக்கப்படுமாம்

பேருந்து கட்டணம் குறைக்கப்படுமாம்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில், எரிபொருள் விலை குறைக்கப்பட்டால், ஜுன் மாதம் இடம்பெறவுள்ள பேரூந்து கட்டண திருத்தத்தில், கட்டணக் குறைப்பு இடம்பெறக்கூடும் என இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலேயே, தேசிய பேரூந்து கட்டண சூத்திரம் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் பெறுமதி மற்றும் பணவீக்கத்தின் அடிப்படையில், இந்த நிலைமை அவதானிக்கப்படுகிறது.

இதற்கமைய, பணவீக்கம் குறைவடையுமாயின், பேரூந்து கட்டணமும் நிச்சயமாக குறைவடையும் என்ற எண்ணக்கரு உள்ளது.

விலை தளம்பல் குறித்து, நாளாந்தம் ஆய்வு செய்து தரவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles