செய்திகள்உள்நாட்டுவாக்குச்சீட்டுகளை அச்சிடுவதில் சிக்கல்

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதில் சிக்கல்

வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இன்னும் அரச அச்சகத்துக்கு வழங்கப்படவில்லை.

இதனால் அஞ்சல் மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கான கொடுப்பனவு இன்னும் கிடைக்கப்பெறாததால், அந்தப் பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தப் பணிகளுக்காக 152 மில்லியன் ரூபாவும், ஊழியர்களின் கொடுப்பனவுக்காக 52 மில்லியன் ரூபாவும் தேவைப்படுவதாகவும், ஆனால் 40 மில்லியன் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles