Friday, May 8, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்துகளிலிருந்து 395 லீற்றர் டீசலை திருடிய இருவர் கைது

பேருந்துகளிலிருந்து 395 லீற்றர் டீசலை திருடிய இருவர் கைது

இங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நம்பபான பிரதேசத்தில் இரவு வேளைகளில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பேருந்துகளில் இருந்து 395 லீற்றர் டீசல் திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 35 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிசிடிவி கமராக்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர்களுடன் சிறிய லொறி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருடப்பட்ட டீசலை விற்பனை செய்து அவர்கள் பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அப்போது அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் மர்மநபர்கள் சிறிய லொறியில் வந்து டீசலை திருடுவது பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles