வெளிநாடு ஒன்றில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 4,920 கிலோகிராம் கால்நடை தீவனத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (07) மாலை கொழும்பு துறைமுகத்தில் இருந்து 07 கொள்கலன்களில் கால்நடை தீவனம் கொண்டு செல்லப்பட்டது.
அங்கு, ஒரு கொள்கலனில் இருந்து 1,476,000 ரூபா பெறுமதியான 4,920 கிலோகிராம் கால்நடை தீவனத்தை மோசடியான முறையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவருகிறது.
சந்தேக நபர் இன்று (08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.