முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயணத்தடையை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நீக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலிமுகத்திடலில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு இன்று (08) நீதவான் திலின கமகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷவை பங்கேற்க அனுமதிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த தடையை நீக்குவதற்கு நீதவான் நடவடிக்கை எடுத்தார்.