Sunday, November 17, 2024
30 C
Colombo
செய்திகள்உலகம்7,000 ஊழியர்களை பணி நீக்க தயாராகும் மெட்டா நிறுவனம்

7,000 ஊழியர்களை பணி நீக்க தயாராகும் மெட்டா நிறுவனம்

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா பொருளாதார மந்த நிலையால் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

அந்த வகையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமை உள்ளடக்கிய மெட்டா நிறுவனம் ஒரு புதிய சுற்று பணி நீக்கங்களுக்கு திட்டமிட்டு வருகிறது.

மேலும் இந்த வாரத்தில் மாத்திரம் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, கடந்த நவம்பரில் 13 சதவீதம் ஊழியர்களை நீக்கியுள்ளது.

அதேபோல், மேலும் திறமையான நிறுவனமாக மாறும் முயற்சியிலும் மெட்டா ஈடுபட்டுள்ளது.

அதன் முந்தைய சுற்றுகளில், மெட்டா நிறுவனம் 11,000 தொழிலாளர்களைக் குறைத்தது.

தனது நிறுவனத்தை சமன் செய்யவும், மேலாளர்களுக்கு தொகுப்புகளை வழங்கவும், தேவையற்றதாகக் கருதும் முழு குழுக்களை குறைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணிநீக்கம் செய்ய மெட்டா முடிவெடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles