Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலஹிரு வீரசேகர – சுகதானந்த தேரருக்கான பிடியாணையை மீளப்பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

லஹிரு வீரசேகர – சுகதானந்த தேரருக்கான பிடியாணையை மீளப்பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் லஹிரு வீரசேகர மற்றும் பிக்கு மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் டெம்பிட்டியே சுகதானந்த தேரர் ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப் பெறுமாறு நீதிமன்றம் இன்று(3) உத்தரவிட்டுள்ளது.

நகர்த்தல் பத்திரமொன்றை தாக்கல் செய்து இன்று அவர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இதனையடுத்து, கோட்டை நீதிவான் திலின கமகேவினால் அவர்களுக்கு எதிராக நேற்றைய தினம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், எதிர்கால வழக்கு விசாரணைகளின் போது உரிய வகையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிவான் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் என .தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles