சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வைத்து போலி கௌரவ டொக்டர் பட்டங்களை சினிமா பிரபலங்களுக்கு வழங்கிய ஹரிஷ் தலைமறைவாகியுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50 பேருக்கு கெளரவ டொக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அவை அனைத்தும் போலியானவை என தெரிய வந்ததை அடுத்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் 7 பிரிவுகளின் கீழ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விழா ஏற்பாட்டளரான ஹரிஷ் திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
