Thursday, May 7, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'குடு அஞ்சு'வுக்கு உதவிய தம்பதியினர் கைது

‘குடு அஞ்சு’வுக்கு உதவிய தம்பதியினர் கைது

டுபாயில் தலைமறைவாகியுள்ள “இரத்மலானை குடு அஞ்சு”வின் பண விவகாரங்களை நிர்வகித்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 14 இலட்சம் ரூபா பண கையிருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரிய-ஒருவல பிரதேசத்தில் இரண்டு மாடி கொண்ட சொகுசு வீட்டில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் “இரத்மலானை குடு” அஞ்சுவின் உறவினர் எனவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேக நபர் முச்சக்கர வண்டியில் சென்று போதைப்பொருள் வியாபாரிகளிடம் பணம் வசூலித்ததாகவும், பின்னர் அதற்காக சொகுசு காரை குடு அஞ்சு கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரின் மனைவி போதைப்பொருள் மூலம் சம்பாதித்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான கணவன் மற்றும் மனைவி தம்பதியினர் 25 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 2021 ஜூன் 03 அன்று அதுரிகிரிய பிரதேசத்தில் வைத்து அத்துரிகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய தம்பதிகள் 26 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.

2020ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் T-56 துப்பாக்கி மற்றும் உயிருள்ள தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles