அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்தது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 334.50 ஆகவும் விற்பனை விலை ரூபா 348.03 ஆகவும் உள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அண்மைய நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கணிசமான அளவில் அதிகரித்து வருகின்றது.
