நாட்டில் இன்றைய தினம் (25) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கிடையில், ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்றும், ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழை பெய்யாது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.