ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, பாதணியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று பண்டாரவளை பதில் நீதிவான் முன்னிலையில் குறித்த நபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை, தண்டவாளத்துக்கு அப்பால் நின்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர், ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வளைத்தளங்களில் பேசுப் பொருளாக மாறியிருந்தது.
குறித்த காணொளியை அடிப்படையாக கொண்டு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.