பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.பி.டி. ஜயசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பணியகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இதற்கு முன்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு பொறுப்பு டிஐஜியாக பணியாற்றியவர்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
