Wednesday, July 16, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யவில்லை

அமைச்சர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யவில்லை

அமைச்சர்களின் பாவனைக்காக 239 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களுக்காக இந்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தார்.

ஆனால் வனவிலங்கு பாதுகாப்புக்கான வாகனங்கள், நீர் பவுசர்கள், அம்புலன்ஸ்கள் போன்ற வாகனங்கள் மட்டுமே கடந்த 2021 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதற்கு பின்னர் எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த நெருக்கடியின் போது நிதியமைச்சு கடுமையான நிதி முகாமைத்துவத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles