இலங்கையிலுள்ள சுமார் 18% உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளதாக இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருப்தியற்ற நிலையில் உள்ள 18% உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
“இலங்கையில் தற்போதுள்ள 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் திருப்தியற்ற நிலையில் உள்ளன. குறிப்பாக மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. மேலும் 27% சராசரி நிலையிலும் மற்றும் 55% மிகவும் சிறந்த நிலையிலும் உள்ளன. இலங்கையின் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 2022 பொது சுகாதார பரிசோதகர்கள் உணவு நுகர்வு வகைப்பாடு அமைப்பு படிவத்தின் கணக்கெடுப்பு தரவுகளின்படி இந்தத் தரவை வெளியிடப்படுகிறது. தரவுகளின்படி, A பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 55% மும், B பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 27% மும், மற்றும் C பிரிவில் திருப்தியற்ற நிலையில் 18 சதவீதமான ஹோட்டல் மற்றும் உணவகங்கள் உள்ளன. மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவை உற்பத்தி செய்யும் 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அபிவிருத்தி செய்வதற்காக அவற்றை குறைந்தபட்சம் B வகைக்கு கொண்டு வருவதற்காக தேவையான அறிவுறுத்தல்கள், ஒழுங்குபடுத்தல்கள் போன்று தேவைப்படும்போது சட்ட நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்துள்ளது.