Wednesday, July 16, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாயும் மகளும் சடலங்களாக மீட்பு

தாயும் மகளும் சடலங்களாக மீட்பு

கினிகத்தேன – பெரகஹமுல பிரதேசத்தில் வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கினிகத்ஹேன பெரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பல நாட்களாக அவர்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை எனவும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் பிரதேசவாசி ஒருவர் கினிகத்தேன பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இரு சடலங்களும் மீட்கப்பட்டன.

இருவரது உடல்களும் படுக்கையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனவும், உயிரிழந்த பெண்ணின் கணவரும் மகனும் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இது தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles