சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று (7) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்களின் வருமான அளவைக் கருத்தில் கொள்ளும்போது, பொருட்களின் விலை இன்னும் அதிகமாகவே உள்ளது.
எனவே, பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தாம் கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டார்.
#The Morning